திருப்பதி ஏழுமலையான் கோயிலில் மே மாதம் ரூ.109.99 கோடி காணிக்கை

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். வார விடுமுறை நாட்கள், பண்டிகை நாட்களில் கூடுதல் எண்ணிக்கையில் பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். இவ்வாறு ஏழுமலையானை தரிசனம் செய்யும் பக்தர்கள் அங்குள்ள உண்டியலில் நகை, பணம், உள்ளிட்டவற்றை காணிக்கையாக செலுத்துகின்றனர். இந்த காணிக்கை தினமும் கணக்கிடப்பட்டு ஏழுமலையான் கோயில் வங்கி கணக்கில் சேர்க்கப்படுகிறது.

அதன்படி கடந்த மே மாதம் முழுவதும் ஏழுமலையானை 23.38 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர். 11 லட்சம் பக்தர்கள் தலைமுடியை காணிக்கையாக செலுத்தினர். சுவாமி தரிசனம் செய்த பக்தர்கள் கோயில் உண்டியலில் ரூ.109.99 கோடி காணிக்கையாக செலுத்தியுள்ளனர். 1.6 கோடி லட்டுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது என தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

Related posts

விராலிமலையில் பட்டாசு கிடங்கில் நடந்த வெடிவிபத்தில் இறந்தவர் குடும்பத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

மேலூர் அருகே இன்று அதிகாலை பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்து மூதாட்டி பலி; 2 பேர் படுகாயம்

கிடப்பில் போடப்பட்ட சிவகங்கை புறவழிச்சாலை பணி தீவிரம்: பொதுமக்கள் மகிழ்ச்சி