சென்னை அண்ணா மேம்பாலம் அருகே ரூ.1,000 கோடி மதிப்புள்ள 110 கிரவுண்ட் நிலத்தை சட்டப்படியே அரசு கையகப்படுத்தியது

சென்னை : சென்னை அண்ணா மேம்பாலம் அருகே ரூ.1,000 கோடி மதிப்புள்ள 110 கிரவுண்ட் நிலத்தை சட்டப்படியே அரசு கையகப்படுத்தியது. 110 கிரவுண்ட் நிலமும் பொதுமக்களின் நலனுக்காக பயன்படுத்தப்படும் என்று ஐகோர்ட்டில் தமிழ்நாடு அரசு விளக்கம் அளித்துள்ளது. உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்ற உத்தரவுப்படியே நிலத்தை அரசு கையகப்படுத்தியதாக ஐகோர்ட்டில் பதில் அளித்துள்ளது. மீட்கப்பட்ட நிலத்துடன் சேர்த்து செம்மொழி பூங்கா உலகத் தரத்துக்கு மேம்படுத்தப்பட உள்ளது. லண்டன் ராயல் தாவரவியல் பூங்கா, துபாயின் மிராகில் பூங்கா போன்று செம்மொழி பூங்கா மேம்படுத்தப்பட உள்ளது.

Related posts

ஜூன் 3: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை

வாக்கு எண்ணிக்கை நாளில் ரொம்ப உஷாராக இருங்க… முகவர்களுக்கு செல்வப்பெருந்தகை அறிவுறுத்தல்

101வது பிறந்தநாளை முன்னிட்டு கலைஞர் நினைவிடத்தில் இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை: தமிழகம் முழுவதும் திமுக சார்பில் நலத்திட்ட உதவிகளுக்கு ஏற்பாடு