₹24 லட்சத்திற்கு பருத்தி ஏலம்

வாழப்பாடி, மார்ச் 21: சேலம் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் வாழப்பாடி கிளையில் நேற்று பருத்தி ஏலம் நடைபெற்றது. இதில் வாழப்பாடி, பெத்தநாயக்கன்பாளையம், அயோத்தியாப்பட்டணம் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 175 விவசாயிகள், 988 மூட்டை பருத்தியை கொண்டு வந்திருந்தனர். பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 6 வியாபாரிகள் கலந்து கொண்டனர். ஏலத்தில் டிசிஎச் ரகம் பருத்தி குவிண்டால் அதிகபட்சம் ₹11,599க்கும், குறைந்தபட்சம் ₹9,008க்கும், ஆர்சிஎச் ரகம் பருத்தி குவிண்டால் அதிகபட்சம் ₹8,650க்கும், குறைந்தபட்சம் ₹6,899க்கும், கொட்டு ரகம் பருத்தி குவிண்டால் அதிகபட்சம் ₹5,900க்கும், குறைந்தபட்சம் ₹3,800க்கும் விற்பனையானது. மொத்தமாக ₹24 லட்சத்துக்கு பருத்தி ஏலம் போனது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related posts

திருத்தங்கல்லில் சாலையின் நடுவே ஏற்பட்ட பள்ளத்தை மூட வேண்டும்: பொதுமக்கள் கோரிக்கை

வில்லிபுத்தூர் அருகே இலவச தென்னை கன்றுகள் வழங்கல்

குறைவான செலவில் குச்சி முருங்கை சாகுபடி செய்து நிரந்தர வருமானம் பெறலாம்: வேளாண்துறை ஆலோசனை