வெங்ககல்பட்டி மேம்பாலத்தில் படர்ந்துள்ள மணற்பரப்புகளை அகற்ற வேண்டும்

கரூர், ஜூன்6: வெங்ககல்பட்டி மேம்பாலத்தில் படர்ந்துள்ள மணற்பரப்புகளை அகற்ற வேண்டும் என  வாகனஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். கரூரில் இருந்து திண்டுக்கல், குஜிலியம்பாறை, மணப்பாறை உட்பட பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் அனைத்து வாகனங்களும் வெங்ககல்பட்டி வழியாக சென்று வருகிறது.

வெங்ககல்பட்டி பகுதியில் கரூர் திருச்சி பைபாஸ் சாலை உள்ளதால் மேம்பாலம் கட்டப்பட்டு பயன்பாட்டில் உள்ளது. இந்நிலையில், தொடர் காற்றின் காரணமாக மேம்பாலத்தில் அதிகளவு மணல் பரவியுள்ளது.விபத்தினை ஏற்படுத்தும வகையில் அதிகளவு மணல் பரவியுள்ளதால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகின்றனர்.

 

எனவே, இதனை சுத்தம் செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் மேம்பாலத்தை ஆக்ரமித்துள்ள மணல்களை பணியாளர்கள் மூலம் அகற்ற தேவையான ஏற்பாடுகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என வாகனஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related posts

நடவடிக்கை எடுக்க மக்கள் வலியுறுத்தல் 1 கோடி குடும்பமும் தலா 10 மர கன்றுகள் நட்டு கோடை கால கூடைப்பந்து பயிற்சி நிறைவு விழா

2030ல் பசுமையான தமிழகம் உருவாக்குவோம் கரூர், திருச்சி பைபாஸ் சீத்தப்பட்டி பிரிவு மேம்பால குகை வழிப்பாதையில் குடிமகன்களின் நடமாட்டம்

மயிலாடுதுறையில் சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு பொது தேர்வில் முதலிடம் பிடித்த மாணவருக்கு பாராட்டு