வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு

நாமக்கல், மார்ச் 21: நாமக்கல் சின்னமுதலைப்பட்டியை சேர்ந்தவர் அரிஹரன். இவரது மனைவி காயத்ரி (36). இவர்கள் நேற்று காலைஇ வீட்டை பூட்டி விட்டு, வேலைக்கு சென்று விட்டனர். இவர்களின் மகன் லோகேஸ்வரன், அங்குள்ள அரசு பள்ளியில் 8ம் வகுப்பு படிக்கிறான். மாலையில் பள்ளி முடிந்து, யோகேஸ்வரன் வீட்டிற்கு வந்தான். அப்போது வீட்டின் ஓடு பிரிக்கப்பட்டு வீட்டில் பீரோவில் இருந்த 1 பவுன் நகை மற்றும் ₹7800 திருடு போனது தெரியவந்தது. இது குறித்து காயத்ரி நாமக்கல் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, பணம், நகையை திருடி சென்ற நபர்களை தேடி வருகின்றனர்.

Related posts

பைரவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை

ஸ்ரீராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் +1 வகுப்பு துவக்க விழா

தேவனூர் கிராமத்தில் முன்னாள் எம்பி. எஸ்.சிவசுப்ரமணியன் 5ம் ஆண்டு நினைவு தினம்