வத்தலக்குண்டுவில் பள்ளி முன்பு மீண்டும் வேகத்தடை

 

வத்தலக்குண்டு, ஜூன் 7: வத்தலக்குண்டுவில் தமிழக ஆளுநர் வருகையையொட்டி பள்ளிகள் முன்பு நெடுஞ்சாலையில் போடப்பட்டிருந்த வேகத்தடைகள் அகற்றப்பட்டன. அவற்றை பள்ளி திறக்கும் முன்பு மீண்டும் அமைக்க வேண்டும் என கடந்த ஜூன் 2ம் தேதி தினகரனி் படத்துடன் செய்தி வெளியிட்டு இருந்தது.

இதன் எதிரொலியாக வத்தலக்குண்டு நெடுஞ்சாலை துறையினர் மதுரை சாலையில் காளியம்மன் கோயில் அருகே ஒரு தனியார் பள்ளி முன்பு அகற்றப்பட்டிருந்த வேகத்தடையையும், மதுரை சாலையில் சிஎஸ்ஐ தேவாலயம் அருகே பள்ளியின் முன்பு அகற்றப்பட்டிருந்த வேகத்தடையையும் மீண்டும் அமைத்தனர். பொதுமக்கள் செய்தி வெளியிட்ட தினகரனுக்கும் வேகத்தடை அமைத்து கொடுத்த வத்தலக்குண்டு நெடுஞ்சாலைத்துறை உதவிகோட்ட பொறியாளர் வீரன், உதவி பொறியாளர் தாமரை மாறன் மற்றும் அதிகாரிகளுக்கு பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.

Related posts

சென்னையில் 9, 13, 14, 15வது மண்டலங்கள் மற்றும் தாம்பரம் பகுதிகளில் நாளை முதல் ஜூன் 2ம் தேதி வரை 2 நாளுக்கு ஒருமுறை குடிநீர் சப்ளை : குடிநீர் வாரியம் தகவல்

பூந்தமல்லியில் பரபரப்பு இந்து அமைப்பு மாநில தலைவர் வெட்டி படுகொலை: தப்பிய மர்ம நபருக்கு வலை

கீழ்ப்பாக்கம் மனநல காப்பகத்தில் மனநலம், நரம்பியல் துறைக்கு உலக தரத்தில் புதிய கட்டிடம்: விரைவில் பயன்பாட்டிற்கு வருகிறது