வட்டமலை முருகன் கோயில் பகுதியில் இரவில் கொட்டப்படும் மருத்துவ கழிவுகள்

காங்கயம், ஏப்.13: காங்கயம் தாராபுரம் சாலையில் உள்ளது வட்டமலை. இங்கு பிரசித்தி பெற்ற முத்துகுமாரசாமி கோயில் இந்துசமய அறநிலத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த கோயிலுக்கு சுற்றுவட்டார பகுதியில் இருந்து பக்தர்கள் வந்து செல்வர். இதனால் முக்கிய விசேஷ தினத்தில் மக்கள் கூட்டம் இருக்கும். இப்பகுதியில் விவசாயத்தை நம்பி வாழ்கின்றனர். இப்பகுதி மிகவும் வறட்சியான பகுதியாக உள்ளதால் கால்நடை வளர்ப்பு மிகவும் முக்கியமானதாகும். இந்த சாலையில் இரவு நேரங்களில் மருத்துவ கழிவுகள் மற்றும் பிற கழிவுகளை சாலையோரங்களில் வீசி செல்வதால் அப்பகுதியில் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

கால்நடைகளுக்கும் நோய் பரவும் நிலையில் உள்ளது. மேலும் ஆடு, மாடுகள் மேய்ச்சலுக்கும் செல்லும்போது ஊசிகள் குத்தி உள்ளது. கோயில் பகுதியில் மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்டுள்ளதால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. இதனால் கிராம மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். இதையடுத்து மருத்துவ கழிவுகளை உடனடியாக அகற்றவேண்டும் எனவும், மாவட்ட நிர்வாகம் தடுத்து நிறுத்த வேண்டும் என வட்டமலை பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related posts

கோயில் திருவிழாவில் நாட்டு வெடி வெடித்ததில் தனியார் நிறுவன ஊழியர் காயம்

சுங்க கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும்

திருவானைக்கோவில் அருகே பனையபுரம் பள்ளியில் அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி திடீர் ஆய்வு