ராஜீவ் காந்தி நினைவு தினம்

ஆர்எஸ்.மங்கலம், மே 23: ஆர்.எஸ்.மங்கலத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி 33வது நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. வட்டார தலைவர் சுப்பிரமணியன் தலைமை வகித்தார். நகர தலைவர் முகமது காசிம் முன்னிலை வகித்தார். நிகழ்வில் ராஜீவ் காந்தி உருவபடத்திற்கு மாலை அணிவித்தும், மலர் தூவியும் மரியாதை செலுத்தினர். இதில் மாவட்ட பொது செயலாளர் முருகன், வட்டார தலைவர் மனோகரன், வட்டார செயலாளர் காசிநாததுரை மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Related posts

பைரவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை

ஸ்ரீராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் +1 வகுப்பு துவக்க விழா

தேவனூர் கிராமத்தில் முன்னாள் எம்பி. எஸ்.சிவசுப்ரமணியன் 5ம் ஆண்டு நினைவு தினம்