திருவாடானை சிகே மங்கலத்தில் மெகா சைஸ் பள்ளம் சீரமைப்பு

திருவாடானை, மே 23 திருச்சி- ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ளது சிகே மங்கலம். இங்குள்ள மின்வாரிய அலுவலகம் அருகே சாலையில் மெகா சைஸ் பள்ளம் ஒன்று இருந்தது. இதனால் எதிரே கனரக வாகனங்கள் வரும் சமயத்தில் டூவீலர்கள் சாலையின் ஓரத்தில் செல்லும் போது இந்த பள்ளத்தில் விழுந்து அடிக்கடி விபத்து ஏற்பட்டது. இதுகுறித்த செய்தி தினகரனில் நேற்று முன்தினம் படத்துடன் வெளியானது. இதன் எதிரொலியாக சாலையில் இருந்த அந்த மெகா சைஸ் பள்ளம் சீரமைக்கப்பட்டது இதனால் இப்பகுதி மக்கள், வாகனஓட்டிகள் தினகரனுக்கு நன்றி தெரிவித்தனர்.

Related posts

பைரவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை

ஸ்ரீராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் +1 வகுப்பு துவக்க விழா

தேவனூர் கிராமத்தில் முன்னாள் எம்பி. எஸ்.சிவசுப்ரமணியன் 5ம் ஆண்டு நினைவு தினம்