ரயில் நிலையத்தில் பணிகள் மந்தம்

 

திருப்பூர், மார்ச் 11: அமாவாசை என்பதால் திருப்பூர் மீன் மார்க்கெட்டில் மீன்கள் வாங்க பொதுமக்கள் வராததால் கூட்டம் குறைந்து காணப்பட்டது. திருப்பூர் பல்லடம் ரோட்டில் தென்னம்பாளையம் மீன் மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இந்த மீன் மார்க்கெட்டில் திருப்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதி மக்கள் மற்றும் சில்லரை வியாபாரிகள் மீன்களை வாங்கி செல்வார்கள்.

இந்த மீன் மார்க்கெட்டில் கடல், டேம் மீன்கள் விற்பனை செய்வது வழக்கம். தொழிலாளர்கள் நிறைந்த ஊரான திருப்பூரில் மீன்களை வாங்குவதற்கு ஏராளமானோர் வந்து செல்வார்கள். இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமையான நேற்று அமாவாசை என்பதால் மீன் மார்க்கெட்டில் மீன்கள் வாங்க பொதுமக்கள் கூட்டம் வழக்கத்தை விட குறைவாக காணப்பட்டது. பொதுமக்கள் கூட்டம் குறைந்ததால் விற்பனையும் குறைவாக இருந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

Related posts

முன்னோர்களின் ஆரோக்கியத்திற்கும் நீண்ட ஆயுளுக்கும் பாரம்பரிய நெல் ரகமே காரணம்

கூத்தாநல்லூர் அருகே ஆடு திருடிய 2 பேர் கைது

திருத்துறைப்பூண்டியில் புதிதாக பஸ் நிலையம் கட்ட பழைய பேருந்து நிலையம் இடிக்கும் பணி மும்முரம்