கிழக்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம்

 

நாமக்கல், மார்ச் 11: நாமக்கல்லில் இன்று கிழக்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் நடக்கிறது. இது குறித்து நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ராஜேஸ்குமார் எம்பி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது: நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம், இன்று (11ம் தேதி) காலை 8 மணிக்கு, மாவட்ட திமுக அலுவலகத்தில் நடைபெறுகிறது. மாவட்ட அவைத்தலைவர் மணிமாறன் தலைமை வகிக்கிறார். வனத்துறை அமைச்சர் மதிவேந்தன், எம்எல்ஏக்கள் ராமலிங்கம், பொன்னுசாமி ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். கூட்டத்தில், நாமக்கல் மாவட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியை பிரித்து, நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவ வங்கியை தொடங்க அனுமதி அளித்து, உத்தரவு பிறப்பித்த, தமிழக முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது. மேலும் நாடாளுமன்ற தேர்தல் பணிகள் குறித்தும், ஆலோசிக்கப்பட உள்ளது. எனவே, இக்கூட்டத்தில், முன்னாள் நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்கள், தலைமைக் கழக நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்கள் தொகுதி பொறுப்பாளர்கள், அனைத்து சார்பு அணியின் மாவட்ட நிர்வாகிகள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்ளிட்ட அனைவரும் கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும். இவ்வாறு ராஜேஸ்குமார் எம்பி தெரிவித்துள்ளார்.

 

Related posts

36 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கிறது மத் பாம்பன் குமரகுருதாசர் கோயிலில் ஜூலை 12ம் தேதி குடமுழுக்கு விழா: அறநிலையத்துறை தகவல்

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு 51 வயது நபருக்கு 10 ஆண்டு சிறை: சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு

இன்னுயிர் காப்போம் திட்டத்தில் 61 ஆயிரம் பேருக்கு ரூ.45.87 கோடியில் சிகிச்சை