ரயில்வே கீழ்பாலம் அருகே நடமாடும் பூக்கடையால் போக்குவரத்து பாதிப்பு

தஞ்சாவூர், மே 25: தஞ்சாவூர் ரயில்வே கீழ்பாலம் அருகே சாலைகளில் நடமாடும் பூக்கடை வைத்திருப்பவர்களால் தினமும் அந்த பகுதியில் அதிகளவில் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. தஞ்சாவூர் சாந்தபிள்ளை கேட்டு அருகே ரயில்வே கீழ்பாலம் உள்ளது. அந்த வழியாக தினமும் ஆயிரக்கணக்கான பேருந்துகள், இருசக்கர வாகனங்கள் நான்கு சக்கர வாகனங்கள் சென்று வருகின்றன. அந்த வழியாக அரசு பேருந்துகள் புதிய பேருந்து நிலையம், ராமநாதன் ரவுண்டானா, புதிய மாவட்ட நீதிமன்றம் சாலை செல்கிறது. இந்த நிலையில் ரயில்வே கேட் பாலத்தின் அருகே நடமாடும் கடைகளில் பூ விற்பனை செய்யப்படுகிறது. பூ விற்பனை செய்பவர்கள் சாலையில் வண்டிகளை போட்டு பூ விற்பனை செய்து வருகிறார்கள். இதனால் அந்தப் பகுதியில் தினமும் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது. அதேபோல் இருசக்கர வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக் கொண்டு விபத்துகளும் ஏற்படுகிறது. எனவே மாவட்ட நிர்வாகம் மற்றும் போக்குவரத்து துறை அதிகாரிகள் இதனை கருத்தில் கொண்டு இது குறித்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related posts

பைரவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை

ஸ்ரீராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் +1 வகுப்பு துவக்க விழா

தேவனூர் கிராமத்தில் முன்னாள் எம்பி. எஸ்.சிவசுப்ரமணியன் 5ம் ஆண்டு நினைவு தினம்