மோகனூர் -வாங்கல் சாலை சோதனைச்சாவடியில் எஸ்பி ஆய்வு

மோகனூர், ஏப்.10: மோகனூர் – வாங்கல் சாலையில் பறக்கும்படையினர் நடத்திய வாகன சோதனையை மாவட்ட எஸ்பி., ராஜேஸ்கண்ணன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தமிழகத்தில் வருகிற 19ம்தேதி நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அதுசமயம் அரசியல் கட்சியினர் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் கொடுப்பதை தடுக்கும் வகையில், நாமக்கல் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பறக்கும்படையின் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக மோகனூரில் இருந்து வாங்கல் செல்லும் சாலையில் அமைக்கப்பட்டுள்ள சோதனை சாவடியில் 24 மணி நேரமும், அனைத்து வாகனங்களும் தீவிர பரிசோதனைக்கு பிறகு அனுப்பப்பட்டு வருகிறது. இந்நிலையில் நாமக்கல் மாவட்ட எஸ்பி., ராஜேஸ்கண்ணன், நேற்று சோதனை சாவடியில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.அப்போது அவ்வழியாக வந்த கார், லாரி உட்பட அனைத்து வாகனங்களையும், பறக்கும்படையினர் சோதனை செய்வதை பார்வையிட்டார். இந்த ஆய்வின் போது மோகனூர் இன்ஸ்பெக்டர் சவிதா, வருவாய்த்துறையினர் மற்றும் போலீசார் உடனிருந்தனர்.

Related posts

கோயில் திருவிழாவில் நாட்டு வெடி வெடித்ததில் தனியார் நிறுவன ஊழியர் காயம்

சுங்க கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும்

திருவானைக்கோவில் அருகே பனையபுரம் பள்ளியில் அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி திடீர் ஆய்வு