மேலநீலிதநல்லூரில் விவசாயிகளுக்கு புதிய இயந்திரங்கள் அறிமுக கூட்டம்

 

சங்கரன்கோவில், ஜூன் 11: மேலநீலிததநல்லூர் வட்டாரத்தில், வேளாண்மை உழவர் நலத் துறை சார்பாக வேளாண்மை உதவி இயக்குனர் அறிவுரையின்படி, வேளாண் தொழில்நுட்ப மேலாண்மை முகமை திட்டத்தின் மூலமாக வேளாண் பொறியியல் துறை சார்பாகவும் பண்ணை இயந்திரமயமாக்கல் மற்றும் புதிய இயந்திரங்களை பிரபலப்படுத்தவும், விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. பயிற்சிக்கு வேளாண்மை இணை இயக்குநர் தமிழ் மலர் தலைமை வகித்து விவசாயிகளிடையே பேசினார். அப்போது வேளாண் அடுக்கு திட்டம் தொடர்பாகவும், கிராம நிர்வாக அலுவலரிடம் விவசாயிகள் தங்களுடைய ஆவணங்களை கொடுத்து வலை தளத்தில் பதிவேற்றம் செய்து 13 துறை திட்டங்களின் பயன்களைப் பெறவும், மற்றும் வேளாண் உழவர் நலத்துறை சம்பந்தமான திட்டங்கள் பற்றியும் பயிர் காப்பீடு செய்வதன் அவசியம் பற்றியும் பேசினார்.

மேல நீதநல்லூர் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் ஞான தீபா, கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் குறித்து விரிவாக எடுத்துக் கூறினார் மேலும் வேளாண் பொறியாளர் திருப்பதி பேசுகையில்,‘‘ மானிய விலையில் சோலார் பம்ப்செட் அமைப்பது, டிராக்டர் மானிய விலையில் பெறுவது, பண்ணை குட்டை அமைப்பது மற்றும் மேலும் பல புதிய பண்ணை இயந்திரங்களை மானிய விலையில் பெற முடியும் என்பதை விவசாயிகளிடையே எடுத்துக் கூறினார் வேளாண்மை அலுவலர் மகேஷ் அவர்கள் திட்டங்கள் மானிய விவரங்கள் பற்றி பேசினார் பயிற்சியில் பகுதி உதவி வேளாண்மை அலுவலர் திருமலை குமார் திட்டங்கள் குறித்து எடுத்துக் கூறினார் பயிற்சி ஏற்பாடுகளை உதவி தொழில்நுட்ப மேலாளர் ஆனந்தன், பயிர் அறுவடை பரிசோதகர் மகேஷ் செய்திருந்தனர்.

Related posts

முன்னோர்களின் ஆரோக்கியத்திற்கும் நீண்ட ஆயுளுக்கும் பாரம்பரிய நெல் ரகமே காரணம்

கூத்தாநல்லூர் அருகே ஆடு திருடிய 2 பேர் கைது

திருத்துறைப்பூண்டியில் புதிதாக பஸ் நிலையம் கட்ட பழைய பேருந்து நிலையம் இடிக்கும் பணி மும்முரம்