மனநலம் குன்றிய சிறுவனுக்கு தொல்லை தொழிலாளி போக்சோவில் கைது

கூடலூர், ஜூன் 11: கூடலூரில் மனநலம் குன்றிய சிறுவனுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த தொழிலாளியை போக்சோவில் போலீசார் கைது செய்தனர். கூடலூர் தம்மணம்பட்டி பகுதியைச் சேர்ந்த மனவளர்ச்சி குன்றிய சிறுவன், பாட்டியின் பராமரிப்பில் இருந்து வருகிறார். உத்தமபாளையத்தில் உள்ள மனவளர்ச்சி குன்றியோர் பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வருகிறான்.

இந்நிலையில், நேற்று முன்தினம் அதே பகுதியைச் சேர்ந்த கூலித்தொழிலாளி அன்னக்கொடி (47) என்பவர், சிறுவனை அவரது வீட்டிற்கு அழைத்துச் சென்று, பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதுகுறித்த புகாரில் கூடலூர் தெற்கு போலீசார் விசாரணை நடத்தி, அன்னக்கொடியை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

Related posts

கோயில் திருவிழாவில் நாட்டு வெடி வெடித்ததில் தனியார் நிறுவன ஊழியர் காயம்

சுங்க கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும்

திருவானைக்கோவில் அருகே பனையபுரம் பள்ளியில் அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி திடீர் ஆய்வு