முன்னாள் நகராட்சி இயக்குனருக்கு ஓராண்டு சிறை

கோவை, மார்ச் 29: வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் முன்னாள் நகராட்சி மண்டல இயக்குனருக்கு ஒரு ஆண்டுசிறை தண்டனை விதித்து கோவை நீதிமன்றம் தீர்ப்பளித்தது. சேலம் நகராட்சி நிர்வாக முன்னாள் மண்டல இயக்குனராக பணியாற்றியவர் கணேசன் (78). இவர் 1993ம் ஆண்டு ஜனவரி 1 முதல் 2003ம் ஆண்டு டிசம்பர் 31ம் தேதி வரை வருமானத்துக்கு அதிகமாக ரூ.53 லட்சத்து 6 ஆயிரத்து 699-க்கு சொத்து சேர்த்ததாகவும், இதற்கு அவருடைய மனைவி கனிமொழி (77) உடந்தையாக இருந்ததாகவும் கோவை லஞ்ச ஒழிப்பு போலீசார் கடந்த 2003-ம் ஆண்டு வழக்குப்பதிவு செய்தனர். இவ்வழக்கு விசாரணை கோவை லஞ்ச ஒழிப்பு விசாரணை கோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கு விசாரணை முடிந்த நிலையில், வழக்கை விசாரித்த நீதிபதி மோகன ரம்யா குற்றம் சாட்டப்பட்ட கணேசன், அவரது மனைவி கனிமொழி ஆகியோருக்கு ஒரு ஆண்டு சிறை தண்டனையும் ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

Related posts

பெரியகருப்பூர் சாமுண்டீஸ்வரி கோயில் காப்பு கட்டு விழா

முதல்வரின் 3 ஆண்டுகால ஆட்சியில் முத்தான திட்டங்கள்; காலை உணவு திட்டம் பேருதவியாக உள்ளது: குழந்தைகளின் பெற்றோர் பெருமிதம்

அதிக லாபம் ஆசை காட்டி பெண்ணிடம் ₹6.56 லட்சம் மோசடி