முதியவரை ஏடிஎம்மில் ஏமாற்றிய தொழிலாளி குண்டாசில் கைது

திருப்பூர், மார்ச் 27: திருப்பூர் மாவட்டம், குன்னத்தூர் பகுதியில் கடந்த மார்ச் மாதம் 2-ம் தேதி ஏடிஎம் இயந்திரத்தில் பணம் எடுக்க சென்ற முதியவரிடம் பணம் எடுத்து கொடுக்க உதவி செய்வது போல நடித்து பின்னர் முதியவரின் கார்டுக்கு பதிலாக வேறு ஏடிஎம் கார்டை மாற்றி கொடுத்துள்ளார். பின்னர் முதியவரின் வங்கிக்கணக்கில் இருந்து ரூ.26 ஆயிரத்தை ஏமாற்றியுள்ளார். இதுகுறித்து குன்னத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
திருப்பூர் மாவட்ட எஸ்.பி உத்தரவுப்படி தனிப்படையினர் தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.

இந்த சம்பவம் தொடர்பாக தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரத்தை சேர்ந்த தொழிலாளியான கதிரேசன் (45) என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் கதிரேசனை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க போலீஸ் எஸ்.பி அபிஷேக் குப்தா பரிந்துரையின் பேரில் கலெக்டர் கிறிஸ்துராஜ் உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து குன்னத்தூர் போலீசார், கோவை மத்திய சிறையில் உள்ள கதிரேசனிடம் ஓராண்டு குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பதற்கான உத்தரவை வழங்கினர்.

Related posts

நடவடிக்கை எடுக்க மக்கள் வலியுறுத்தல் 1 கோடி குடும்பமும் தலா 10 மர கன்றுகள் நட்டு கோடை கால கூடைப்பந்து பயிற்சி நிறைவு விழா

2030ல் பசுமையான தமிழகம் உருவாக்குவோம் கரூர், திருச்சி பைபாஸ் சீத்தப்பட்டி பிரிவு மேம்பால குகை வழிப்பாதையில் குடிமகன்களின் நடமாட்டம்

மயிலாடுதுறையில் சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு பொது தேர்வில் முதலிடம் பிடித்த மாணவருக்கு பாராட்டு