முதலமைச்சர் பிறந்தநாளை மாதம் முழுவதும் நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாட வேண்டும்

 

திருப்பூர், மார்ச் 1: தி.மு.க. திருப்பூர் வடக்கு மாவட்ட செயலாளர் க.செல்வராஜ் எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழக முதல்-அமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் இன்று (வெள்ளிக்கிழமை) கொண்டாடப்படுகிறது. 71-வது பிறந்தநாள் விழாவை திருப்பூர் வடக்கு மாவட்டத்துக்கு உட்பட்ட மாநில, மாவட்ட நிர்வாகிகள்,சார்பு அணிகளின் நிர்வாகிகள்,

தொண்டர்கள் ஒன்றிணைந்து மார்ச் மாதம் முழுவதும் ஆங்காங்கே பொதுமக்கள் பயன்பெறும் வகையில் இலவச மருத்துவ முகாம், ரத்ததான முகாம் நடத்த வேண்டும். கண் தானம் செய்தும்,முதியோர், ஆதரவற்றோர் குழந்தைகள், மாற்றுத்திறனாளிகளுக்கு உணவு வழங்கியும்,பள்ளி குழந்தைகளுக்கு நோட்டு, புத்தகங்கள், எழுதுபொருட்கள் வழங்கியும் சிறப்பாகவும், எழுச்சியோடும் கொண்டாட வேண்டும்.

இந்த விழாக்களில் மாநில,மாவட்ட நிர்வாகிகள், தலைமை செயற்குழு,பொதுக்குழு உறுப்பினர்கள்,ஒன்றிய,நகர, பகுதி, கிளை நிர்வாகிகள்,முன்னாள்,இன்னாள் எம்.எல்.ஏ.க்கள்,மக்கள் பிரதிநிதிகள்,மாவட்ட பிரதிநிதிகள்,சார்பு அணிகளின் நிர்வாகிகள்,தொண்டர்கள் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகள் வழங்கி சிறப்பாக கொண்டாட வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related posts

கோயில் திருவிழாவில் நாட்டு வெடி வெடித்ததில் தனியார் நிறுவன ஊழியர் காயம்

சுங்க கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும்

திருவானைக்கோவில் அருகே பனையபுரம் பள்ளியில் அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி திடீர் ஆய்வு