அவிநாசி சட்டமன்ற தொகுதி திமுக இளைஞரணி ஆலோசனை கூட்டம்

 

அவிநாசி, மார்ச்1: திருப்பூர் வடக்கு மாவட்ட திமுக செயலாளர், திருப்பூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் செல்வராஜ் அறிவுறுத்தலின்படி,அவிநாசி சட்டமன்ற தொகுதி இளைஞரணி ஆலோசனைக் கூட்டம் அவிநாசி மங்கலம் ரோடு தனியார் திருமண மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. மார்ச், 1ம் தேதியில் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் பிறந்தநாளை இளைஞர்களின் எழுச்சி நாளாக கொண்டாடுவது, நாடாளுமன்ற தேர்தலில்,திமுக கட்சியினருடன் சேர்ந்து, திமுக இளைஞரணி தேர்தல் பணியாற்றுவது,திமுக அரசின் சாதனைகளை தெருமுனை விளக்க பிரசார கூட்டம் நடத்துவது என கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

கூட்டத்திற்கு, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் கே.எம்.ஈ.தங்கராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் சேவூர் ரவிச்சந்திரன் வரவேற்றார்.மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் முகமது ஜீனைத் முன்னிலை வகித்தார்.கூட்டத்தில், அவிநாசி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அவிநாசி ஒன்றியம், சேவூர் ஒன்றியம், திருமுருகன்பூண்டி ஒன்றியம் மற்றும் திருமுருகன் பூண்டி நகரம், அவிநாசி பேரூர் ஆகிய பகுதிகளின் இளைஞரணி அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்கள் கலந்து கொண்டனர். முடிவில், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் லிங்கேஸ்வரன் நன்றி கூறினார்.

Related posts

காட்பாடியில் 3 மாதங்களாக சிறுமியை மிரட்டி சிறுவன் சில்மிஷம் போக்சோ வழக்குப்பதிவு

காட்பாடியில் துணிகரம் தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் 8 சவரன் திருட்டு

அதிமுக தொண்டர்கள் அனைவரும் விரைவில் ஒன்றிணைந்து வருவார்கள் வேலூரில் டிவிவி தினகரன் பேட்டி