மானாமதுரை வட்டாரத்தில் வேளாண் புத்தாக்க திட்டம் கூடுதல் தலைமை செயலாளர் ஆய்வு

மானாமதுரை, மே 12: மானாமதுரை வட்டாரத்தில் உலக வங்கி நிதி உதவியுடன் பாசன வேளாண்மை புத்தாக்கத் திட்டம் 2023ம் ஆண்டு பகுதி 4ன் கீழ், வைகை உபவடிநிலப் பகுதியில் செயல்படுத்தப்படுகிறது. நேரடி நெல் விதைப்பு விளக்க திடலை மாநில கூடுதல் தலைமைச் செயலாளரும், திட்ட இயக்குனருமான தென்காசி ஜவகர், மாவட்ட கலெக்டர் மதுசூதன ரெட்டி ஆகியோர் ஆய்வு செய்தனர். மேல நெட்டூர் கிராமத்தில் திட்டப் பயனாளிகளான விவசாயிகளிடம் நேரடியாக கலந்துரையாடல் நடைபெற்றது. பயனாளிகள் விதைப்பு கருவி கொண்டு நேரடி விதைப்பு செய்வதாலும், இரு வரிசைகளுக்கு இடையில் இடைவெளி இருப்பதால் கோனோவீடர் கருவியை வைத்துக் கொண்டு களை எடுப்பதாலும் களை எடுக்கும் செலவு குறைவாகும், மகசூல் கூடுதலாக பெறமுடியும் என வேளாண் அலுவலர்கள் விளக்கினர். மேலநெட்டூர் கிராமத்தில் விவசாயி முத்துராஜ் வயலில் அமைக்கப்பட்டிருந்த செயல்விளக்கத் திடலை பார்வையிட்டு திட்ட பயன்பாடு குறித்து கேட்டிருந்தனர். இந்நிகழ்ச்சியில் மாநில வேளாண் ஆலோசகர் ஷாஜகான், வேளாண் இணை இயக்குனர் தனபாலன், வேளாண் துணை இயக்குனர் பன்னீர்செல்வம், வேளாண் உதவி இயக்குனர் ரவிசங்கர் திட்ட செயல்பாடு குறித்து விவசாயிகளுக்கு எடுத்துரைத்தனர். விழா ஏற்பாடுகளை மானாமதுரை வேளாண் அலுவலர், துணை வேளாண்மை அலுவலர் செய்திருந்தனர்.

Related posts

தாந்தோணிமலை கடைவீதியில் போக்குவரத்து நெருக்கடிக்கு தீர்வு காண வேண்டும்

ராயனூர் அருகே பாசன வாய்க்காலில் கழிவு அகற்ற வேண்டும்

குக்கிராமங்களில் கூட பைப் லைன் அமையுங்கள்: குடிநீர் விநியோகம் கண்காணிக்க தனிக்குழு