தேனிஎஸ்ஐ தேர்விற்கு இலவச பயிற்சி

விருதுநகர், மே 12: விருதுநகர் கலெக்டர் ஜெயசீலன் வெளியிட்ட தகவல்: தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வுக்குழுமத்தால் 621 சார்பு ஆய்வாளர் காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டு, ஆகஸ்ட் மாதம் எழுத்து தேர்வு நடைபெற உள்ளது. பட்டப்படிப்பு தேர்ச்சி, வயது வரம்பு 30, ஆன்லைனில் விண்ணப்பிக்க ஜூன் 30 கடைசி நாள். கூடுதல் விபரங்களை www.tnusrbonline.org என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்பு மற்றும் மாதிரி தேர்வுகள் விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக தன்னார்வ பயிலும் வட்டம் மூலம் நடைபெற்று வருகிறது. தேர்வுக்கு நேரடியாக பயிற்சி பெற விரும்புவோர் https://t.me/vnrstudycircle என்ற டெலிகிராம் மூலமாகவோ studycirclevnr@gmail.com என்ற மின்னஞ்சல் மூலமாகவோ அல்லது நேரிலோ மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலத்தை தொடர்பு கொண்டு பெயரை பதிவு செய்து கொள்ளலாம்.

Related posts

36 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கிறது மத் பாம்பன் குமரகுருதாசர் கோயிலில் ஜூலை 12ம் தேதி குடமுழுக்கு விழா: அறநிலையத்துறை தகவல்

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு 51 வயது நபருக்கு 10 ஆண்டு சிறை: சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு

இன்னுயிர் காப்போம் திட்டத்தில் 61 ஆயிரம் பேருக்கு ரூ.45.87 கோடியில் சிகிச்சை