பெரம்பலூர் மாவட்டத்தில் சார்பு ஆய்வாளர் தேர்வுக்கு விண்ணப்பிக்க ஆலோசனை

 

பெரம்பலூர், ஜூன் 7: பெரம்பலூர் மாவட்டத்தில் தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் நடத் தும் சார்பு ஆய்வாளர் தேர்விற்கு விண்ணப்பிக்கும் நபர்பகளுக்கு ஏதேனும் சந்தேகமிருப்பின் மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் இயங்கி வரும் உதவி மையத்தை (HELP DESK) அணுகலாம் என்று மாவட்ட எஸ்பி ஷ்யாம்ளாதேவி தகவல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தெரிவித்திருப்பதாவது: தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் சார்பு ஆய்வாளர் தேர்விற்காக பெரம்பலூர் மாவட்டத்தில் வசிக்கும் இளைஞர்களை ஊக்குவிக்கும் விதமாக இலவச பயிற்சி வகுப்புகள் முன்னதாக வே மாவட்ட எஸ்பி ஷ்யாம்ளாதேவி தொடங்கப்பட்டு, பெரம்பலூர் வேலை வாய்ப்பு அலுவலத்தில் இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் சார்பு ஆய்வாளர் தேர்விற்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு உதவும் வகையில் பெரம்பலூர் மாவட்ட எஸ்பி ஷ்யாம்ளா தேவி, மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் இலவச உதவி மையம் (HELP DESK) ஒன்றை தொடங்கி வைத்துள்ளார். இதன்படி விண்ணப்பதாரர்கள் தேர்விற்கு விண்ணப்பிப்பதில் ஏதேனும் சந்தேகம் இருப்பின் மாவட்ட எஸ்பி அலுவலகத்திற்கு நேரில் சென்றோ அல்லதுஇலவச உதவி எண்ணான 9840693775 என் ற தொலைபேசி எண்ணின் மூலமாக தொடர்பு கொண்டோ தங்களது சந்தேகங்களுக்கு பதில் கேட்டுக்கொள்ளாம் என்று மாவட்ட எஸ்பி ஷ்யாம்ளா தேவி தெரிவித்துள்ளார்.

Related posts

ஜேஇஇ நுழைவு தேர்வில் மதிப்பெண் குறைந்ததால் மாணவன் தற்கொலை: தாம்பரம் அருகே சோகம்

தண்டையார்பேட்டையில் வீடு புகுந்து ரவுடி வெட்டிக்கொலை: 5 பேருக்கு வலை

தனியார் கம்பெனியின் கெமிக்கல் தொட்டியில் விழுந்த ஊழியர் பலி