புகையிலை பொருட்கள் பறிமுதல்

திருப்பூர், ஜூன் 11: திருப்பூரில் உணவு பொருள் பாதுகாப்புத்துறை அலுவலர்கள், போலீசாருடன் இணைந்து மண்ணரை, எம்.எஸ்.நகர், லட்சுமி நகர் ஆகிய பகுதிகளில் உள்ள பெட்டி கடைகளில் சோதனை செய்தனர். இதில், 3 கடைகளில் புகையிலை பொருட்கள் அடங்கிய பாக்கெட்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்வது தெரிந்தது. அவற்றைப் பறிமுதல் செய்த அதிகாரிகள் கடைக்காரர்களுக்கு தலா 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர். இதுபோல், தொடர்ந்து விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டது.

Related posts

36 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கிறது மத் பாம்பன் குமரகுருதாசர் கோயிலில் ஜூலை 12ம் தேதி குடமுழுக்கு விழா: அறநிலையத்துறை தகவல்

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு 51 வயது நபருக்கு 10 ஆண்டு சிறை: சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு

இன்னுயிர் காப்போம் திட்டத்தில் 61 ஆயிரம் பேருக்கு ரூ.45.87 கோடியில் சிகிச்சை