பயிர்களை அழிக்கும் படையப்பா மூணாறு விவசாயிகள், மக்கள் பீதி

மூணாறு, ஏப். 27: மூணாறு பகுதியில் படையப்பா யானை குடியிருப்பு மற்றும் விளை நிலங்கள் அருகில் சுற்றி வருவதால் விவசாய தொழிலாளர்கள், பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். கேரள மாநிலம், மூணாறு பகுதியில் படையப்பா என அழைக்கப்படும் காட்டு யானை தொழிலாளர்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதிக்கு அருகில் சுற்றி திரிவதோடு அப்பகுதி விவசாய நிலங்களில் பயிரிட்டுள்ள வாழை, காரட், முட்டைகோஸ், பீன்ஸ் உள்ளிட்ட பயிர்களையும் நாசம் செய்து வருகிறது.

கடந்த 2 நாட்களுக்கு முன்பு இரவு குட்டியார்வேலி பகுதியில் இறங்கிய படையப்பா யானை அப்பகுதியில் பயிரிட்டிருந்த வாழை, பீன்ஸ் பயிர்களை தின்று தீர்த்தது. இரவு, பகலாக குடியிருப்பு மற்றும் விளைநிலங்கள் அருகில் படையப்பா யானை நடமாடுவதால் விவசாய தொழிலாளர்கள், பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். மேலும் காட்டு யானைகள் தொல்லை அதிகரித்து வருவதால் பெரும்பாலான எஸ்டேட் பகுதிகளில் உள்ள தொழிலாளர்கள் பல தலைமுறைகளாக வீடுகளுக்கு அருகில் பயிரிட்டு வந்த காய்கறி விவசாயத்தை முற்றிலுமாக கைவிட்டு வருகின்றனர்.

Related posts

மேட்டமலை கிராமத்தில் தண்ணீர் கசியும் புதிய வாட்டர்டேங்க் சீரமைக்க மக்கள் கோரிக்கை

வடமாடு மஞ்சுவிரட்டில் விவசாயி மண்டை உடைப்பு

வத்திராயிருப்பில் நெல் கொள்முதல் நிலையம் நான்கு இடங்களில் திறப்பு: விவசாயிகள் மகிழ்ச்சி