மூதாட்டியிடம் பணம் பறித்த வழக்கில் வாலிபருக்கு 10 ஆண்டு கடுங்காவல் தண்டனை

வில்லிபுத்தூர் ஏப். 27: மூதாட்டியை தாக்கி பணம் பறித்த வாலிபருக்கு 10 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதித்து, வில்லிபுத்தூர் மாவட்ட மகிளா விரைவு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. விருதுநகர் மாவட்டம், வில்லிபுத்தூர் இந்திரா நகர் பகுதியை சேர்ந்தவர் அழகம்மாள் (81). கடந்த 2013ம் ஆண்டு வீட்டில் தனியாக இருந்தபோது, மணி என்ற மணிகண்டன்(25) அத்துமீறி நுழைந்து அவரை தாக்கி வீட்டில் இருந்த பணம், செல்போன்கள், பாஸ்போர்ட் ஆகியவற்றை எடுத்துச் சென்று விட்டார். இதுகுறித்த புகாரில் வில்லிபுத்தூர் நகர் போலீசார், வழக்குப்பதிவு செய்து மணிகண்டனை கைது செய்தனர்.

இதுதொடர்பான வழக்கு வில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட மகிளா விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்கறிஞர் ஜான்சி ஆஜரானார். இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கிய மாவட்ட மகிளா விரைவு நீதிமன்ற நீதிபதி பகவதியம்மாள், வாலிபர் மணிகண்டனுக்கு 10 ஆண்டு கடுங்காவல் தண்டனை, ரூ.2,000 அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

Related posts

முன்னோர்களின் ஆரோக்கியத்திற்கும் நீண்ட ஆயுளுக்கும் பாரம்பரிய நெல் ரகமே காரணம்

கூத்தாநல்லூர் அருகே ஆடு திருடிய 2 பேர் கைது

திருத்துறைப்பூண்டியில் புதிதாக பஸ் நிலையம் கட்ட பழைய பேருந்து நிலையம் இடிக்கும் பணி மும்முரம்