நீதிபதிகளுக்கான தியான பயிற்சி

 

திருச்சி, மார்ச் 20: திருச்சி மாவட்ட கோர்ட்டில் நீதிபதிகளுக்கான மூன்று நாள் இலவச தியானப் பயிற்சி வகுப்பை மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி பாபு நேற்று துவக்கி வைத்தார்.
திருச்சி மாவட்ட கோர்ட்டில் நீதிபதிகளுக்கான இலவச தியானப் பயிற்சி வகுப்புகள் நேற்று துவங்கியது. தியான பயிற்சியை மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி பாபு துவக்கி வைத்தார். தலைமை குற்றவியல் நீதிபதி மீனா சந்திரா மற்றும் மூன்றாவது கூடுதல் நீதிபதி தங்கவேல் ஆகியோர் நிகழ்ச்சிக்கு முன்னிலை வகித்தனர். முதல் நாள் நிகழ்ச்சியில் தியானப் பயிற்சியினை வழங்கும் ‘ஹார்ட்புல்நஸ்’ (heartfullness) நிறுவனத்தின் தமிழ்நாடு தலைமை பயிற்சியாளர் பிரகாஷ் தியான பயிற்சிகளை நீதிபதிகளுக்கு அளித்தார். இப்பயிற்சியில் பயிற்சியாளர்கள் ராமசுப்ரமனியன், சங்கீதா ஆகியோர் உடன் இருந்தனர். பயிற்சிக்கான ஏற்படுகளை குற்றவியல் வக்கீல்கள் சங்க செயலாளர் வெங்கட் செய்திருந்தார்.

Related posts

முன்னோர்களின் ஆரோக்கியத்திற்கும் நீண்ட ஆயுளுக்கும் பாரம்பரிய நெல் ரகமே காரணம்

கூத்தாநல்லூர் அருகே ஆடு திருடிய 2 பேர் கைது

திருத்துறைப்பூண்டியில் புதிதாக பஸ் நிலையம் கட்ட பழைய பேருந்து நிலையம் இடிக்கும் பணி மும்முரம்