நாடாளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணி நிச்சயம் வெல்லும்

 

திருப்பூர், ஜன. 29: திருப்பூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பனியன் நிறுவனங்கள் உள்ளன. இதில் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். திருப்பூரில் இருந்து தினமும் பல கோடி ரூபாய்க்கு ஆடைகள் ஏற்றுமதி செய்யப்பட்டது. இதுபோல் உள்நாட்டு வர்த்தகமும் நடந்து வந்தது. இந்நிலையில் ஒன்றிய அரசின் ஜிஎஸ்டி மற்றும் தவறான பொருளாதார கொள்கை, சலுகைகள் குறைப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பனியன் தொழில் கடும் சரிவை சந்தித்து வருகிறது.

இந்த நிலையில் நேற்று திருப்பூர்-காங்கயம் ரோட்டில் உள்ள பனியன் நிறுவனங்களில் வேலை செய்து வருகிற தொழிலாளர்களிடம் தெற்கு தொகுதி செல்வராஜ் எம்எல்ஏ குறைகளை கேட்டறிந்து, தொழிலாளர்களுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டார். தொடர்ந்து தையல் எந்திரத்தில் அமர்ந்து துணிகளை தைத்தார். இது குறித்து செல்வராஜ் எம்எல்ஏ கூறியதாவது: வருகிற நாடாளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணி நிச்சயம் வெல்லும். இதன் பின்னர் திருப்பூரில் வேலையின்மை திண்டாட்டத்திற்கு தீர்வு காணப்படும்.

தொழிலாளர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்து தரப்படும். மீண்டும் இரவு, பகல் என பரபரப்பாக திருப்பூர் இயங்கும் நிலை உருவாக்கப்படும். பனியன் தொழிலையும், தொழிலாளர்களையும் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும். இந்தியா கூட்டணிக்கு ஆதரவு தர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். இதில் தெற்கு மாநகர செயலாளர் டி.கே.டி.மு.நாகராஜ், கவுன்சிலர் ராதாகிருஷ்ணன், நிர்வாகி திலக்ராஜ் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

Related posts

பைரவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை

ஸ்ரீராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் +1 வகுப்பு துவக்க விழா

தேவனூர் கிராமத்தில் முன்னாள் எம்பி. எஸ்.சிவசுப்ரமணியன் 5ம் ஆண்டு நினைவு தினம்