அஞ்சுகிராமம் அருகே அச்சக ஊழியர் உட்பட 2 பேர் மீது தாக்குதல்

 

நாகர்கோவில், ஜன.29: அஞ்சுகிராமம் அருகே அழகப்பபுரம் மேலத்தெருவை சேர்ந்தவர் மாதேஷ் (41). நாகர்கோவிலில் அச்சக ஊழியராக வேலை பார்த்து வருகிறார். அழகியபாண்டியபுரம் எட்டாமடை பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (37). கொத்தனார். இவர்களுக்கு இடையே ஊரில் உள்ள கோயில் நிர்வாகம் தொடர்பாக பிரச்னை இருந்து வந்தது. இந்த முன்விரோதம் காரணமாக கடந்த 19ம் தேதி இரவு அழகப்பபுரத்தில் வைத்து மணிகண்டன் மற்றும் அழகப்பபுரத்தை சேர்ந்த நிஷாந்த் (25), கண்ணன் (53) ஆகியோர் சேர்ந்து மாதேஷ் மற்றும் அவரது அண்ணன் ராஜகோபால் ஆகியோரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.

இதில் படுகாயம் அடைந்த ராஜேகோபால் மற்றும் மாதேஷ் ஆகியோர் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக மாதேஷ் அஞ்சுகிராமம் போலீசில் அளித்த புகாரின் பேரில் போலீசார் மணிகண்டன், நிஷாந்த், கண்ணன் ஆகியோர் மீது வழக்குபதிவு செய்து நிஷாந்த்தை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள மணிகண்டன் மீது ஆரல்வாய்மொழி, பூதப்பாண்டி, கன்னியாகுமரி, சுசீந்திரம், அஞ்சுகிராம் உள்ளிட்ட காவல்நிலையங்களில் ஐந்து வழக்குகள் நிலுவையின் உள்ளது.

Related posts

கோயில் திருவிழாவில் நாட்டு வெடி வெடித்ததில் தனியார் நிறுவன ஊழியர் காயம்

சுங்க கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும்

திருவானைக்கோவில் அருகே பனையபுரம் பள்ளியில் அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி திடீர் ஆய்வு