நாச்சியம்மன் கோயிலில் மாசி திருவிழா

சிங்கம்புணரி, மார்ச் 7: சிங்கம்புணரி அருகே எஸ்.புதூர் ஒன்றியம் பிரான்பட்டி கிராமத்தில் மலை நாச்சியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் மாசித் திருவிழா கடந்த 27ம் தேதி காப்பு கட்டி தொடங்கியது. தொடர்ந்து ஊர் மையத்தில் உள்ள மந்தையில் இரவில் பக்தர்கள் கும்மி அடித்து அம்மன் வழிபாடு நடைபெற்றது. பெண்கள் பொங்கல் கூடை சுமந்து மதுரை தேசிய நெடுஞ்சாலை உள்ள கோயிலில் பொங்கல் வைத்தும் கரும்புத் தொட்டில், மாவிளக்கு எடுத்தும் அம்மனை வழிபட்டனர்.

அம்மனுக்கு சந்தன காப்பு, வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இதில் பிரான்பட்டி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Related posts

பைரவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை

ஸ்ரீராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் +1 வகுப்பு துவக்க விழா

தேவனூர் கிராமத்தில் முன்னாள் எம்பி. எஸ்.சிவசுப்ரமணியன் 5ம் ஆண்டு நினைவு தினம்