தொடக்கக் கல்வி பட்டயப்படிப்புக்கு மே 31 வரை விண்ணப்பிக்கலாம் மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர் தகவல்

நெல்லை, மே 24: தொடக்க கல்வி பட்டயப்படிப்புக்கு வருகிற 31ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து நெல்லை மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர் கோல்டா கிரேனா ராஜாத்தி கூறியிருப்பதாவது: தொடக்கக் கல்வி 2024-25ம் கல்வி ஆண்டிற்கான பட்டயப் படிப்பு மாணவர் சேர்க்கைக்கு வருகிற 31ம் தேதி மாலை 5.45 மணி வரை scert.tnschools.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்
பிக்கலாம் அல்லது நெல்லை மாவட்டம் முனைஞ்சிப்பட்டி மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்திற்கு நேரில் வந்து விண்ணப்பிக்கலாம். இதற்கு கல்வித் தகுதியாக பிளஸ்2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். படிப்பு 2 ஆண்டுகள் ஆகும். பொதுப் பிரிவினர் மற்றும் பிசி, பிசிஎம், எம்பிசி, டிஎன்சி பிரிவினர் 50 சதவீதம் மதிப்பெண்களும், எஸ்சி, எஸ்சிஏ, எஸ்டி பிரிவினர் 45 சதவீதம் மதிப்பெண்களும் பிளஸ்2வில் பெற்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். எஸ்சி, எஸ்சிஏ, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகள் 31.07.2024 அன்று 35 வயதுக்குள்ளும், ஆதரவற்றோர், கணவனால் கைவிடப்பட்டோர் மற்றும் கைம்பெண் 31.07.2024 அன்று 40 வயதுக்குள்ளும், கலப்பினத் தம்பதியர் எனில் ஓசி, பிசி, பிசிஎம், எம்பிசி, டிஎன்சி பிரிவினர் 31.07.2024 அன்று 32 வயதுக்குள்ளும், எஸ்சி, எஸ்சிஏ, எஸ்டி பிரிவினர் 37 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும். விண்ணப்ப கட்டணமாக எஸ்சி, எஸ்சிஏ, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகள் ரூ.250ம், ஓசி, பிசி, பிசிஎம், எம்பிசி, டிஎன்சி ஆகியோர் ரூ.500ம் செலுத்த வேண்டும். சேர்க்கை கட்டணம் ரூ.3,500 மற்றும் கல்வி கட்டணமாக ஒரு ஆண்டிற்கு ரூ.1,500ம் செலுத்த வேண்டும். இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.

Related posts

பைரவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை

ஸ்ரீராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் +1 வகுப்பு துவக்க விழா

தேவனூர் கிராமத்தில் முன்னாள் எம்பி. எஸ்.சிவசுப்ரமணியன் 5ம் ஆண்டு நினைவு தினம்