திருவொற்றியூரில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

திருவொற்றியூர், ஜூன் 4: திருவொற்றியூர், எண்ணூர் விரைவு சாலை, எல்லையம்மன் கோயில் தெரு அருகே உள்ள கல்யாணி செட்டிநகர் மற்றும் அதை சுற்றியுள்ள குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் கால்வாய் கட்டுமானப் பணி நடந்து வருகிறது. ஆனால், இந்த பணி நடைபெறும் இடங்களில் ஒரு சிலர் சாலையை ஆக்கிரமித்து வீடுகள் மற்றும் குடிசைகளை கட்டியுள்ளனர். இதனால் கால்வாய்ப் பணிகளை மேற்கொள்வதில் சிரமம் ஏற்பட்டது. இதனையடுத்து மழைநீர் கால்வாய் பணி நடைபெறுவதற்கும், பாதாள சாக்கடை கழிவுநீர் இணைப்பு கொடுப்பதற்கும் சாலையில் இடையூறாக இருந்த ஆக்கிரமிப்பு சுவர்கள், வீடுகள், மற்றும் குடிசைகள் போன்றவற்றை அகற்றும் பணி நேற்று நடந்தது.
திருவொற்றியூர் மண்டல அலுவலர் நவநீதன், செயற்பொறியாளர் உசேன் ஆகியோர் தலைமையில் உதவி பொறியாளர் கோதண்டராமன் உள்ளிட்ட பணியாளர்கள் போலீஸ் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்புகளை அகற்றினர்.

Related posts

ஜேஇஇ நுழைவு தேர்வில் மதிப்பெண் குறைந்ததால் மாணவன் தற்கொலை: தாம்பரம் அருகே சோகம்

தண்டையார்பேட்டையில் வீடு புகுந்து ரவுடி வெட்டிக்கொலை: 5 பேருக்கு வலை

தனியார் கம்பெனியின் கெமிக்கல் தொட்டியில் விழுந்த ஊழியர் பலி