திருநாகேஸ்வரம் கவுமாரியம்மன் கோயில்: 58ம் ஆண்டு பால்குட பெருவிழா

கும்பகோணம், மே25: தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் தாலுகா திருநாகேஸ்வரம் புதுத்தெருவில் அருள்பாலிக்கும் கவுமாரியம்மன் கோயில் 58ம் ஆண்டு பால்குடப் பெருவிழா ஊர்வலம் நடைபெற்றது. முன்னதாக நாட்டாற்றங்கறையிலிருந்து சக்தி கரகம், அலகு காவடி புறப்பாடு தொடங்கியது. தொடர்ந்து புதுத்தெரு திரெளபதியம்மன் கோயிலிலிருந்து சக்தி கரகம், பால்குட ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாக வந்தது. பின்னர் கவுமாரியம்மனுக்கு சிறப்பு அலங்காரம், அபிஷேகம், பக்தர்களுக்கு கஞ்சிவார்த்தல் நடைபெற்றது. மாலையில் அம்மன் வீதியுலா நாதஸ்வர வாத்தியங்கள், வாணவேடிக்கைகள் முழங்க நடைபெற்றது. நேற்று மஞ்சள் நீராட்டு மற்றும் அம்மனுக்கு விடையாற்றுதல் நடைபெற்றது.

 

Related posts

பைரவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை

ஸ்ரீராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் +1 வகுப்பு துவக்க விழா

தேவனூர் கிராமத்தில் முன்னாள் எம்பி. எஸ்.சிவசுப்ரமணியன் 5ம் ஆண்டு நினைவு தினம்