தஞ்சாவூரிலிருந்து தூத்துக்குடிக்கு 1250 டன் அரிசி ரயிலில் அனுப்பப்பட்டது

தஞ்சாவூர், மே 6: தஞ்சாவூர் மாவட்டத்திலிருந்து பொது விநியோகத் திட்டத்திற்கு 1250 டன் அரிசி தூத்துக்குடிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. தஞ்சை மாவட்டத்தில் குறுவை, சம்பா, தாளடி என முப்போகம் நெல் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. மேலும் கோடை சாகுபடியும் நடைபெறும். அறுவடை செய்த நெல் கொள்முதல் செய்யப்பட்டு லாரிகள் மூலம் சேமிப்பு கிடங்குகளுக்கு அனுப்பி வைக்கப்படும். இந்த நெல் மூட்டைகள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் மற்றும் தஞ்சை மாவட்டத்திலும் அரவை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று பல்வேறு சேமிப்பு கிடங்குகளில் இருந்து 1250 டன் அரிசி மூட்டைகள் லாரிகளில் தஞ்சாவூர் ரயில் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டது. அங்கிருந்து தூத்துக்குடி மாவட்ட பொது விநியோகத் திட்டத்திற்காக 1250 டன் அரிசி மூட்டைகள் சரக்கு ரயிலின் 21 வேகன்ககளில் அனுப்பி வைக்கப்பட்டது.

Related posts

கோயில் திருவிழாவில் நாட்டு வெடி வெடித்ததில் தனியார் நிறுவன ஊழியர் காயம்

சுங்க கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும்

திருவானைக்கோவில் அருகே பனையபுரம் பள்ளியில் அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி திடீர் ஆய்வு