கும்பகோணம் மகா காளிகா பரமேஸ்வரிஅம்மன் கோயில் சித்திரை திருவிழா

கும்பகோணம், மே6:கும்பகோணம் மகா காளிகா பரமேஸ்வரி அம்மன் ஆலய சித்திரை திருவிழா நேற்று ச நடைபெற்றது. கும்பகோணம் மாநகராட்சி, உள்ளூர் ஊராட்சி, வட்டிப்பிள்ளையார் கோவில் தெற்கு தெருவில் அமைந்துள்ள மகா காளிகா பரமேஸ்வரி அம்மன் இப்பகுதியில் சக்தி வாய்ந்த தெய்வமாக போற்றி வணங்கப்படுகிறது. இந்த ஆலயத்தில் ஆண்டுதோறும் சித்திரைத் திருவிழா விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இவ்வாண்டும் 24ம் ஆண்டு சித்திரை திருவிழா கடந்த மே 1ம் தேதி காலை முகூர்த்தக்கால் நடுதல், கணபதி ஹோமம் நடைபெற்று, அன்று மாலை காப்பு கட்டுதலுடன் துவங்கியது.

இதனைத்தொடர்ந்து விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று வெள்ளிக்கிழமை காலை காவிரி ஆற்றங்கரையிலிருந்து ஏராளமான பக்தர்கள் மேள தாள மங்கள வாத்தியங்கள் முழங்க, நகரின் முக்கிய வீதிகளின் வழியாக பால்குடம் எடுத்து ஊர்வலமாக ஆலயம் வந்தடைந்த பின்னர், அம்மனுக்கு பாலபிஷேகமும், பக்தர்களுக்கு கஞ்சிவார்த்தும் வழங்கப்பட்டது. தொடர்ந்து மாலை அம்மனுக்கு சந்தன காப்பு அலங்காரம் நடைபெற்ற பின்னர், நேற்றிரவு காவேரி ஆற்றங்கரையிலிருந்து சக்தி கரகம், அக்னி கொப்பரை மற்றும் அம்மன் வீதியுலா காட்சியும், மாரியம்மன் நடனமும் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து மகிழ்ந்தனர். தொடர்ந்து நாளை காலை அம்மனுக்கு அபிஷேகமும், விடையாற்றி விழாவுடன் இவ்வாண்டிற்குரிய சித்திரை திருவிழா நிறைவுபெறுகிறது.

Related posts

கட்டிட மேஸ்திரி வீட்டில் 10 கிராம் நகை திருட்டு

மாணவர் சேர்க்கைக்கு 20ம்தேதி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்

நவீன கருவி பொருத்திய 200 ஹெல்மேட் விநியோகம்