சேலத்தில் 103.7 டிகிரி வெயில்

சேலம், ஏப். 16: அக்னி நட்சத்திரம் துவங்குவதற்கு முன்பே, சேலத்தில் கடந்த சில நாட்களாக 100 டிகிரிக்கும் அதிகமாக வெயில் கொளுத்தி வருகிறது. சேலத்தில், நேற்று முன்தினம் 101.5 டிகிரி வெப்ப நிலை பதிவாகி இருந்த நிலையில், நேற்று 103.7 டிகிரியாக வெயில் பதிவாகியுள்ளது. வெயிலின் தாக்கத்தினால் மதிய நேரத்தில் தகிக்கும் வெப்பத்தால், இளம்பெண்கள் முகத்தை மூடிக்கொண்டும், கைகளில் ‘கிளவுஸ்’ மாட்டிக்கொண்டும் பயணிக்கின்றனர். நாளுக்குநாள் அதிகரித்து வரும் வெப்பநிலை காரணமாக பகல் பொழுதுகளில் கடைவீதிகளில் மக்கள் கூட்டமும் குறைவாகவே காணப்படுகிறது. நீண்ட தூர பயணத்தை தவிர்க்கும் மக்கள், வீட்டிலேயே இருந்து விடுகின்றனர். பெரும்பாலும் மாலை நேர பயணத்தையே விரும்புகின்றனர். வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க, குளம், ஏரி உள்ளிட்ட நீர்நிலைகளுக்கு இளைஞர்கள், பள்ளி மாணவர்கள் படையெடுத்து வருகின்றனர்.

Related posts

கோயில் திருவிழாவில் நாட்டு வெடி வெடித்ததில் தனியார் நிறுவன ஊழியர் காயம்

சுங்க கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும்

திருவானைக்கோவில் அருகே பனையபுரம் பள்ளியில் அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி திடீர் ஆய்வு