அரசமரத்துக்கு தீ வைத்த மர்ம நபர்கள்

கெங்கவல்லி, ஏப்.16: வீரகனூர் அருகே உள்ள வீ.ராமநாதபுரம் பகுதியில், நெடுஞ்சாலையில் உள்ள மிக பழமையான அரசமரம், தொடர்ந்து 4வது முறையாக நேற்றும் தீப்பிடித்தது. இதுகுறித்து பொதுமக்கள் கெங்கவல்லி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். நிலைய அலுவலர் (பொ) செல்லப்பாண்டியன் தலைமையில் சம்பவ இடத்துக்கு வந்த வீரர்கள், ஆலமரத்தில் ஏற்பட்ட தீயை சுமார் ஒருமணி நேரம் போராடி அணைத்தனர். தொடர்ந்து 4வது முறையாக மரத்தில் தீ பிடித்ததால், மர்ம நபர்கள் வேண்டுமென்றே தீ வைக்கின்றனா என வீரகனூர் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்த மரத்தை அகற்றுவதற்கு ஆத்தூர் ஆர்டிஓ பிரியதர்ஷினியிடம் அனுமதி கோரியுள்ளதாகவும், நேரில் ஆய்வு செய்த பின்னர் அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் வருவாய்த்துறையினர் தெரிவித்தனர்.

Related posts

36 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கிறது மத் பாம்பன் குமரகுருதாசர் கோயிலில் ஜூலை 12ம் தேதி குடமுழுக்கு விழா: அறநிலையத்துறை தகவல்

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு 51 வயது நபருக்கு 10 ஆண்டு சிறை: சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு

இன்னுயிர் காப்போம் திட்டத்தில் 61 ஆயிரம் பேருக்கு ரூ.45.87 கோடியில் சிகிச்சை