சேம்பார் பள்ளியில் மாணவர் சேர்க்கை பேரணி

காளையார்கோவில், ஏப்.16: காளையார்கோவில் ஒன்றியம் சேம்பார் அரசு நடுநிலை பள்ளியில், மாணவர் சேர்க்கை குறித்த விழிப்புணர்வு பேரணி நடந்தது. பேரணியை சேம்பார் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்(பொ) சுரேஷ் தலைமை தாங்கி துவக்கி வைத்தார். பள்ளி மேலாண்மை குழு தலைவி ஷாலினி மற்றும் ஆசிரியர்கள் முன்னிலை வகித்தனர். ஆங்கில பட்டதாரி ஆசிரியர் முத்துக்குமார் வரவேற்றார்.

தலைமை ஆசிரியர்(பொ) சுரேஷ், பள்ளி ஆசிரியர்கள் குரு சித்ரா முத்துக்குமார், ரெக்ஸ் தெய்வீகன், சீனிவாசன், தனபாக்கியம், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள், இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்கள் கல்விக்குழு உறுப்பினர்கள், பெற்றோர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.

பேரணியில், எண்ணும் எழுத்தும் திட்டம், காலை உணவு திட்டம், புதுமைப்பெண் திட்டம், கல்வி சுற்றுலா, இல்லம் தேடி கல்வித் திட்டம், நான் முதல்வன் திட்டம் உள்ளிட்ட பல்வேறு சலுகைகளை அளிக்கும் அரசு பள்ளியில் மாணவர்களை சேர்க்க வேண்டும் என விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பாதாகைகளை ஏந்தி முக்கிய வீதிகள் வழியாக சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இறுதியாக ஆசிரியர் சீனிவாசன் நன்றியுரை கூறினார்.

Related posts

36 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கிறது மத் பாம்பன் குமரகுருதாசர் கோயிலில் ஜூலை 12ம் தேதி குடமுழுக்கு விழா: அறநிலையத்துறை தகவல்

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு 51 வயது நபருக்கு 10 ஆண்டு சிறை: சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு

இன்னுயிர் காப்போம் திட்டத்தில் 61 ஆயிரம் பேருக்கு ரூ.45.87 கோடியில் சிகிச்சை