சிவகங்கை அருகே டூவீலரில் கொண்டு சென்ற பணம் பறிமுதல்

சிவகங்கை, ஏப்.16: சிவகங்கை அருகே பறக்கும் படையினர் மேற்கொண்ட வாகன சோதனையில் உரிய ஆவணங்களின்றி டூவீலரில் கொண்டு சென்ற ரூ.72,500 பறிமுதல் செய்யப்பட்டது. சிவகங்கை அருகே அலவாக்கோட்டை பகுதியில் நிலையான கண்காணிப்பு குழு சிறப்பு தாசில்தார் சங்கர் தலைமையிலான குழுவினர் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர்.

அப்போது அவ்வழியே நாமக்கல் மாவட்டம், நாவலூர் புதூர் பகுதியைச் சேர்ந்த குணசேகரன் மகன் தினகரன்(27) வந்த டூவீலரை ஆய்வு செய்தனர். அதில் ரூ.72,500 வைத்திருந்தது தெரிய வந்தது. ஆனால் அதற்கான உரிய ஆவணங்கள் இல்லை. இதையடுத்து அந்த பணத்தை பறிமுதல் செய்த அலுவலர்கள் சிவகங்கை மாவட்ட கருவூலத்தில் ஒப்படைத்தனர்.

 

Related posts

கோயில் திருவிழாவில் நாட்டு வெடி வெடித்ததில் தனியார் நிறுவன ஊழியர் காயம்

சுங்க கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும்

திருவானைக்கோவில் அருகே பனையபுரம் பள்ளியில் அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி திடீர் ஆய்வு