சுற்றுச்சூழலை பாதுகாப்பது மிக முக்கியம்

 

பட்டுக்கோட்டை, ஜூன் 10: ‘‘சுற்றுச் சூழலை மனிதர்கள் பாதுகாப்பது மிக முக்கியம். மரம் நட்டு சுற்றுச்சூழலுக்கு உதவுவது நமது ஒவ்வொருவரின் கடமை,’’என்று பட்டுக்கோட்டை வேளாண்மை அலுவலர் அப்சரா தெரிவித்தார். பட்டுக்கோட்டை வட்டாரத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின்கீழ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திட்டக்குடி கிராமத்தில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் இயற்கை வேளாண்மை பற்றிய விழிப்புணர்வுக் கூட்டம் நடந்தது.

கூட்டத்திற்கு பட்டுக்கோட்டை வேளாண்மை அலுவலர் அப்சரா தலைமை வகித்தார். கூட்டத்தில் திட்டக்குடி ஊராட்சி மன்றத் தலைவர், துணைத்தலைவர், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர். வேளாண்மை அலுவலர் அப்சரா பேசுகையில், ‘‘சுற்றுச் சூழலை மனிதர்கள் பாதுகாப்பது மிக முக்கியம். மரம் நட்டு சுற்றுச்சூழலை பாதுகாப்பது நமது ஒவ்வொருவரின் கடமை,’’ என்றார்.

சேதுபாவாசத்திரம் வட்டாரத்தைச் சேர்ந்த இயற்கை விவசாயி கார்த்திக், சாகுபடி செய்யும் பாரம்பரிய நெல் ரகங்கள் குறித்தும், அவர் பின்பற்றும் மேலாண்மை முறைகள் குறித்தும், இயற்கை விவசாயம் பற்றியும், இயற்கை இடுபொருட்கள் தயாரிப்பு மற்றும் பூச்சி விரட்டிகள் பற்றியும் விவசாயிகளிடம் கலந்துரையாடினார். முடிவில் வேளாண்மை அலுவலர் சன்மதி நன்றி கூறினார். கூட்டத்திற்கான ஏற்பாடுகளை உதவி வேளாண்மை அலுவலர் ஜெயபாரதி மற்றும் அட்மா திட்ட அலுவலர் ரமேஷ் ஆகியோர் செய்திருந்தனர்.

Related posts

பெரியகருப்பூர் சாமுண்டீஸ்வரி கோயில் காப்பு கட்டு விழா

முதல்வரின் 3 ஆண்டுகால ஆட்சியில் முத்தான திட்டங்கள்; காலை உணவு திட்டம் பேருதவியாக உள்ளது: குழந்தைகளின் பெற்றோர் பெருமிதம்

அதிக லாபம் ஆசை காட்டி பெண்ணிடம் ₹6.56 லட்சம் மோசடி