சிறுமியை திருமணம் செய்த தொழிலாளி மீது போக்சோ வழக்கு

 

சங்ககிரி, நவ.21: நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் அக்ரஹாரம் கம்பன் நகரைச் சேர்ந்தவர் மணி மகன் கிரிவாசன்(30). கூலி தொழிலாளியான இவர், அப்பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமியை கடத்திச் சென்று, கடந்த பிப்ரவரி மாதம் 16ம் தேதி, தேவூர் புளியம்பட்டியில் உள்ள முருகன் கோயிலில் திருமணம் செய்து கொண்டார்.

இதுகுறித்து தகவலறிந்த சேலம் மாவட்ட சமூக நல அலுவலர் ஜெனிபர் சோனியா ராணி, சங்ககிரி அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில், நேற்று புகார் தெரிவித்தார். இதன்பேரில், இன்ஸ்பெக்டர் வளர்மதி விசாரித்து, 16 வயது சிறுமியை திருமணம் செய்த குற்றத்திற்காக கிரிவாசன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, விசாரித்து வருகிறார்.

Related posts

பல்வேறு வழக்குகளில் தொடர்பு: நீதிமன்றத்தில் வாலிபர் சரண்

தூத்துக்குடி உப்பளத்தில்மின்மோட்டார் திருட்டு

சி.வ.அரசு பள்ளியில் ₹2 கோடியில் புதிய வகுப்பறை கட்டுமான பணிகள் அமைச்சர் கீதாஜீவன் ஆய்வு