சிறந்த சுற்றுச்சூழல் பாதுகாப்பு நடைமுறைகளுக்காக பதக்கம்

பள்ளிபாளையம்,ஏப்.4: சிறந்த சுற்றுச்சூழல் பாதுகாப்பு நடைமுறைகளுக்காக, பள்ளிபாளையம் காகித ஆலை நிர்வாகத்திற்கு, இந்திய தொழில் கூட்டமைப்பு வெண்கல பதக்கம் வழங்கி கௌரவித்துள்ளது. தொழிற்சாலைகளில் சுற்றுச்சூழல், சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு நடைமுறைகளை சிறப்பாக கடைபிடிக்கும் நிர்வாகத்திற்கு, இந்திய தொழில் கூட்டமைப்பின் தென்மண்டல அமைப்பு, ஆண்டுதோறும் சிறந்த நிறுவனங்களை தேர்வு செய்து தங்கம், வெள்ளி மற்றும் வெண்கல பதக்கங்களை வழங்கி கௌரவப்படுத்துவது வழக்கம்.

இந்தாண்டு பள்ளிபாளையம் சேசஷாயி காகித ஆலை நிர்வாகத்தின் பாதுகாப்பு நடைமுறைகளை ஆய்வு செய்த இந்திய தொழில்கூட்டமைப்பு, ஆலை நிர்வாகத்திற்கு வெண்கலப் பதக்கம் வழங்கி பாராட்டியுள்ளது. சென்னையில் நடைபெற்ற விழாவில், இதற்கான விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
வோல்வோ குழும இயக்குனர் சோஹன்ஜித் ரண்ட்வா, டைட்டன் கம்பெனியின் முதன்மை உற்பத்தி அலுவலர் ராஜகோபாலன் ஆகியோர் பங்கேற்று விருதினை வழங்கினர். சேசஷாயி காகித ஆலையின் முதன்மை பாதுகாப்பு மேலாளர் கிருஷ்ணமூர்த்தி, பாதுகாப்பு மேலாளர் நல்லதம்பி ஆகியோர் விருதினை பெற்றுக்கொண்டனர்.

Related posts

கட்டிட மேஸ்திரி வீட்டில் 10 கிராம் நகை திருட்டு

மாணவர் சேர்க்கைக்கு 20ம்தேதி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்

நவீன கருவி பொருத்திய 200 ஹெல்மேட் விநியோகம்