கோழி திருடிய இருவர் கைது

மானூர், பிப். 21: மானூர் அருகேயுள்ள தெற்கு செழியநல்லூரைச் சேர்ந்தவர் ரமேஷ்(48). இவர் ஊரின் கீழ் பகுதியில் கோழிபண்ணை நடத்தி வருகிறார். இந்நிலையில் கடந்த 30ம்தேதி இரவு பண்ணையில் இருந்த உயர் தர கிளிமூக்கு விசிறிவால்கோழி 7 திருடு போயிருந்தது. இதுகுறித்து ரமேஷ் மானூர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் ரபீனா மரியம் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வந்தார். நேற்று அதே ஊரைச் சேர்ந்த முத்துப்பாண்டி மகன் ராமர்(47), நாங்குநேரி அருகேயுள்ள கோதைசேரியைச் சேர்ந்த மாயாண்டி மகன் சின்னத்துரை (29) ஆகிய இருவரையும் கைது செய்தார்.

Related posts

பைரவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை

ஸ்ரீராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் +1 வகுப்பு துவக்க விழா

தேவனூர் கிராமத்தில் முன்னாள் எம்பி. எஸ்.சிவசுப்ரமணியன் 5ம் ஆண்டு நினைவு தினம்