கிணற்றில் மூழ்கி மாணவர் பலி

சங்கரன்கோவில்,பிப்.21: சங்கரன்கோவில் அருகே உள்ள புளியம்பட்டி வடக்கு தெருவைச் சேர்ந்த கனகராஜ் மகன் காட்டுராஜா (14). இவர் சோலைசேரி அரசு பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று முன்தினம் நண்பர்களுடன் ஊரின் தென்பக்கம் உள்ள தனியாருக்கு சொந்தமான கிணற்றில் குளித்து கொண்டிருந்தார். நீச்சல் நன்றாக தெரிந்த காட்டுராஜாவுக்கு திடீரென வலிப்பு நோய் ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் அவர் கிணற்றில் மூழ்கினார். இது குறித்து அப்பகுதி மக்கள் சங்கரன்கோவில் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்ததின் பேரில் தீயணைப்பு வீரர்கள் அங்கு சென்று சுமார் 4 மணி நேரம் தேடி மாணவர் உடலை மீட்டனர். சங்கரன்கோவில் தாலுகா போலீசார் உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Related posts

பக்ரீத் சிறப்பு தொழுகையில் இஸ்லாமியர் திரளாக பங்கேற்பு

காங்கயத்தில் அரசு பேருந்து-கார் மோதல்

கேரளாவிலிருந்து பொள்ளாச்சி மார்க்கெட்டுக்கு அன்னாசி பழம் வரத்து அதிகரிப்பு