கொல்லிமலைக்கு செல்ல தற்காலிக தடை

நாமக்கல், மே 23: நாமக்கல் மாவட்ட கலெக்டர் உமா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: கொல்லிமலையில் உள்ள ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி, மாசிலா அருவி, புளியஞ்சோலை ஆகிய பகுதிகளில் தற்போது நீர்வரத்து அதிகமாக உள்ளது.கொல்லிமலையில் இன்று (23ம் தேதி) கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக, பேரிடர் மேலாண்மைத்துறை அறிவித்துள்ளது. எனவே, சுற்றுலா பயணிகள் ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி, மாசிலா அருவி, புளியஞ்சோலை ஆகிய இடங்களுக்கு செல்ல தற்காலிக தடை விதிக்கப்படுகிறது.

மேலும், சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள், வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சுற்றுலா தலங்களுக்கு வர வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்படுகிறது. இனிவரும் நாட்களில் பெய்யும் மழையின் அளவினை பொறுத்து, வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சுற்றுலா தலங்களில், பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அனுமதிக்கும் தேதி பின்னர் அறிவிக்கப்படும். இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.

Related posts

மலைவாழ் குழந்தைகளுக்கு உதவி

போர்வெல் மோட்டாரில் வயர் திருட்டு

ரயில் நிலைய மேம்பாட்டு பணிகள் ஆய்வு