வேனில் கடத்திய 2.1 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

கிருஷ்ணகிரி, மே 23: கிருஷ்ணகிரி வழியாக ஆந்திராவுக்கு கடத்த முயன்ற 2.1 டன் ரேஷன் அரிசியை அதிகாரிகள் வேனுடன் பறிமுதல் செய்து, டிரைவரை கைது செய்தனர். கிருஷ்ணகிரி மாவட்ட உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு தாசில்தார் சின்னசாமி மற்றும் அலுவலர்கள், சூளகிரி பகுதியில் வாகன தணிக்கை மேற்கொண்டனர். அப்போது, அத்திமுகம் அருகே சென்ற பிக்கப் வேனை நிறுத்தி சோதனை செய்தனர். அதில், தலா 50 கிலோ அளவிலான 42 மூட்டைகளில், 2100 கிலோ ரேஷன் அரிசி இருந்தது தெரியவந்தது.

விசாரணையில், திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரிலிருந்து, கிருஷ்ணகிரி வழியாக ஆந்திர மாநிலம் ஏ.கோட்டாவிற்கு ரேஷன் அரிசியை கடத்த முயன்றது தெரிந்தது. இதையடுத்து அதிகாரிகள் புகாரின் பேரில், கிருஷ்ணகிரி உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து, வேனை ஓட்டி வந்த கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டம் கெர்ஸமங்கலத்தை சேர்ந்த பிரகாஷ்(32) என்பவரை கைது செய்தனர். மேலும் பிக்அப் வேனுடன், ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.

Related posts

பைரவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை

ஸ்ரீராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் +1 வகுப்பு துவக்க விழா

தேவனூர் கிராமத்தில் முன்னாள் எம்பி. எஸ்.சிவசுப்ரமணியன் 5ம் ஆண்டு நினைவு தினம்