கீரணிப்பட்டி முத்துமாரியம்மன் கோயிலில் பால்குட விழா

திருப்புத்தூர், ஏப்.12: திருப்புத்தூர் அருகே உள்ள கீரணிப்பட்டி முத்துமாரியம்மன் கோயிலில் பங்குனி திருவிழாவை முன்னிட்டு கடந்த2ம் தேதி பூச்சொரிதல் விழா நடந்தது. கடந்த 9ம் தேதி அம்மனுக்கு காப்பு கட்டப்பட்டு முதல் நாள் திருவிழா தொடங்கியது. நேற்று காலையில் கீரணிப்பட்டி மற்றும் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் முத்துமாரியம்மனுக்கு அலகு குத்தி, பால்குடம் எடுத்து ஊர்வலமாக வந்தனர். தொடர்ந்து பக்தர்கள் எடுத்து வந்த பாலால் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து முத்துமாரியம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

Related posts

பெரியகருப்பூர் சாமுண்டீஸ்வரி கோயில் காப்பு கட்டு விழா

முதல்வரின் 3 ஆண்டுகால ஆட்சியில் முத்தான திட்டங்கள்; காலை உணவு திட்டம் பேருதவியாக உள்ளது: குழந்தைகளின் பெற்றோர் பெருமிதம்

அதிக லாபம் ஆசை காட்டி பெண்ணிடம் ₹6.56 லட்சம் மோசடி