கி.முதலிப்பட்டி அரசு நடுநிலை பள்ளியில் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணி

 

கறம்பக்குடி, மார்ச் 22: கறம்பக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் கி. முதலிப்பட்டி ஊராட்சி உள்ளது. இங்குள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் நேற்று மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பேரணியை பள்ளி தலைமை ஆசிரியர் செல்வம் தலைமை வகித்து பேராணியை தொடங்கி வைத்தார். பேரணியில் கலந்து கொண்ட மாணவ, மாணவிகள் சேர்ப்போம் சேர்ப்போம், அரசு பள்ளிகளில் மாணவ மாணவிகளை சேர்ப்போம் என்பது உள்ளிட்ட பல்வேறு கோஷங்களை எழுப்பி விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

பேரணி பள்ளியில் வளாகத்தில் தொடங்கி முக்கிய வீதிகள் வழியாக சென்று பின்னர் மீண்டும் பள்ளி வளாகத்தை வந்தடைந்தது. இந்த அரசு பள்ளி மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணியில் பள்ளியின் ஆசிரியர்கள் மணிகண்டன், அந்தோணி சாமி, ஜெயக்குமார், ரேவதி, சுதா, சங்கீதா மற்றும் மாணவ மாணவிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Related posts

காட்பாடியில் 3 மாதங்களாக சிறுமியை மிரட்டி சிறுவன் சில்மிஷம் போக்சோ வழக்குப்பதிவு

காட்பாடியில் துணிகரம் தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் 8 சவரன் திருட்டு

அதிமுக தொண்டர்கள் அனைவரும் விரைவில் ஒன்றிணைந்து வருவார்கள் வேலூரில் டிவிவி தினகரன் பேட்டி