கந்தர்வகோட்டை கோவில்பட்டியில் இல்லம் தேடி கல்வி மையத்தில் சம இரவு, சம பகல் விழிப்புணர்வு

 

கந்தர்வகோட்டை, மார்ச்22: கந்தர்வகோட்டை ஒன்றியம் கோவில்பட்டி இல்லம் தேடி கல்வி மையத்தில் சம இரவு சம பகல் நாள் குறித்து தன்னார்வலர் மாணவர்களும் கலந்துரையாடல் நடைபெற்றது. இந்நிகழ்வில் இல்லம் தேடிக் கல்வி மையம் ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் ரகமதுல்லா பேசியதாவது: சம இரவு நாள் என்பது லத்தீன் வார்த்தைகளான ஈக்வி அதாவது சமம் மற்றும் னாக்ஸ் அதாவது \”இரவு\” என்பதிலிருந்து வந்தது. சமஇரவு நாள் என்பது இரவும் பகலும் சம நீளம் கொண்டதாகக் கருதப்படுகிறது.

சமஇரவு நாள் மார்ச் மார்ச் 21 மற்றும் செப்டம்பர் 23ம் மாதங்களில் நிகழ்கின்றன. வானில் இருக்கும் சூரியன், சந்திரன் மற்றும் பூமியில் அதிக அளவில் அறிவியல் மாற்றங்கள் மற்றும் அறிவியல் சம்பந்தப்பட்ட நாட்கள் இவ்வாறு கொண்டாடப்பட்டு வருகிறது. இதில் இன்று மார்ச் 21ம் தேதி சம இரவு நாளாக பார்க்கப்படுகிறது .அறிவியல் நாளில் முக்கிய தினமாக பார்க்கப்படக்கூடிய இந்நாளில் இரவும் பகலும் சரிசமமாக இருக்கும். 12 மணி நேரம் பகல் 12 மணி நேரம் இரவாக இருக்கிறது வருடத்தில் இரண்டு முறை இந்த சம இரவு நாள் இருக்கும் என்று வானிலை ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். இவ்வாறு அவர் பேசினார்.

Related posts

முன்னோர்களின் ஆரோக்கியத்திற்கும் நீண்ட ஆயுளுக்கும் பாரம்பரிய நெல் ரகமே காரணம்

கூத்தாநல்லூர் அருகே ஆடு திருடிய 2 பேர் கைது

திருத்துறைப்பூண்டியில் புதிதாக பஸ் நிலையம் கட்ட பழைய பேருந்து நிலையம் இடிக்கும் பணி மும்முரம்