கார் மோதி 3 பேர் காயம்

திருச்சி கண் டோன்மெண்ட் எம்ஜிஆர் சிலையில் இருந்து ஐயப்பன் கோயில் வழியாக கலெக்டர் ஆபீஸ் செல்லும் சாலையில் கார் ஒன்று சென்றது. அந்த கார் திடீரென தறி கெட்டு ஓடி ஐயப்பன் கோவில் அருகே நடந்துசென்ற 2 பேர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதில், இருவரும் காயமடைந்தனர். தொடர்ந்து கட்டுப்பாட்டை இழந்த கார், நிற்காமல் பெட்ரோல் பங்க் ரவுண்டானா அருகே பைக்கில் வந்தவர் மீது மோதியது.

இதில் பைக்கில் வந்த நபர் படுகாயம் அடைந்தார். மேலும் அந்த கார் வேகமாக சென்று எதிர்திசையிலுள்ள மின்கம்பத்தின் மீது மோதி நின்றது. இதில் காரை ஓட்டிய நபரும் படுகாயம் அடைந்தார். இதுகுறித்த தகவலின்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த கண்டோன்மெண்ட் தெற்கு போக்குவரத்து போலீசார், காயம் அடைந்த 4 பேரையும் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Related posts

பைரவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை

ஸ்ரீராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் +1 வகுப்பு துவக்க விழா

தேவனூர் கிராமத்தில் முன்னாள் எம்பி. எஸ்.சிவசுப்ரமணியன் 5ம் ஆண்டு நினைவு தினம்