கள்ளச்சாராய ஒழிப்பு விழிப்புணர்வு கூட்டம்

 

கறம்பக்குடி, மே 22: புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி தாலுக்கா கருக்காக்குறிச்சி கரு.தெற்குத்தெரு கிராமத்தில் கள்ளச்சாராய ஒழிப்பு விழிப்புணர்வு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்திற்கு ஆலங்குடி மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் ஆய்வாளர் மணமல்லி உதவி ஆய்வாளர் புகழேந்தி மதுவிலக்கு பிரிவு முதல் நிலை காவலர் கமலஹாசன் மற்றும் காவலர்கள் கலந்து கொண்டு தலைமை வகித்து விழிப்புணர்வு ஆலோசனை கூட்டத்தில் கள்ளச்சாராயத்தினால் ஏற்படும் தீமைகள் மற்றும் சமீபத்தில் கள்ளச்சாராயத்தினால் ஏற்பட்ட உரிழப்புகள் ஆகியவற்றை எடுத்து கூறி கருக்காக்குறிச்சி பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சும் செயலில் ஈடுபடக்கூடாது என்று கூறி ஆலோசனை கூட்டத்தில் அறிவுரைகளை வழங்கினர். இந்த கூட்டத்தில் ஊராட்சி மன்ற தலைவர்கள் உள்ளாட்சி பிரதிநிதிகள் வருவாய் துறையினர் பொதுமக்கள் ஊர் முக்கியஸ்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related posts

பள்ளிகள் திறப்பையொட்டி பாடப்புத்தகங்கள் பிரித்து அனுப்பும் பணி தொடங்கியது

உலக பட்டினி தினத்தை முன்னிட்டு உணவு வழங்கும் திட்டம்

ரேஷன் அரிசி கடத்தல் வழக்கில் 5 மாதத்தில் 142 பேர் கைது